ரயசன் மாணவர் சங்க தலைவர் சங்க கடனட்டையில் $273,000 பாவித்தது தொடர்பாக விசாரணை.

ரயசன் (Ryerson) மாணவர் சங்க தலைவர்கள், மாணவர் ஒன்றிய கடனட்டையில் இருந்து $273,000 டாலர்களை சங்க தேவைகளுக்கு அப்பால் பாவித்திருப்பது பற்றிய குற்றச்சாட்டில் மாணவ சங்க தலைவர் ராம் கணேஷ் (Ramganesh Ragupathy) வகிக்கும் மாணவத்தலைவர் பதவியை விட்டு அவரை அப்புறப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை அனைத்து மாணவர்களிடமும் இருந்தும் எழுந்துள்ளது.


Ram Ganesh (Ramganesh Ragupathy) is the president of the Ryerson Student Union. The union heads are being asked to account for around $273,000 in credit card spending.

கடந்த வருடம் மே மாதம் முதல் பொறுப்பில் இருக்கும் புதிய மாணவர் அணியே, இந்த $273,000 டொலர்களை மாணவர் சங்க கடனட்டையில் இருந்து செலவு செய்துள்ளது.

இப்பொழுது இந்த அணியினர், இந்த செலவுகளை எல்லாம் தமது சொந்த நோக்கத்துக்காக மாணவர் தலைவர் ராம் கணேஷ் அவர்களே செலவுசெய்தார் என்று அவரை சுட்டிக்காட்ட தொடங்கியுள்ளனர்.

Photos of the credit card statement obtained by The Eyeopener show several LCBO (Liquor Control Board of Ontario) purchases. (The Eyeopener)

இந்த செலவு செய்த பணத்தின் பெரும் பகுதி மதுபான கடைகளிலும் (LCBO), இரவு விடுதிகளிலும், AIRBNB யிலும், மேலும் பல சங்க செலவுகளுக்கு அப்பாற்பட்ட இடங்களிலும் கடந்த 8 மாதங்களாக செலவுசெய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்களுக்காக வெளியாகும் Eyeopener பத்திரிகையே இந்த செய்தியை வெளியிட்டிருந்ததது. எனினும் இதை பற்றி எந்த விளக்கமும் மாணவ தலைவர் ராம் கணேஷிடமோ அல்லது மாணவர் சங்கத்திடமோ இருந்து வராத நிலையில் இது இன்று கனடிய தேசிய ஊடகங்கள் அனைத்திலும் வெளியாகியுள்ளது.

இன்றி வெள்ளி (Feb 01, 2019) இரவு மாணவர் சங்க கூட்டம் இது தொடர்பாக கூட்டப்பட்ட பொழுதும், மாணவ தலைவர் கூட்டத்துக்கு சமூகமளிக்கவில்லை.

தனக்கு உயிர் ஆபத்து உள்ளது என்று காரணம் கூறி, தனது சட்டத்தரணி இந்த கூட்டத்துக்கு போகவேண்டாம் என்று கூறினார் என்று கூறி கூட்டத்துக்கு வருவதை தவிர்த்துவிட்டார். தனது சட்டத்தரணியூடாக இயக்குனர்கள் குழுவுக்கு ஒரு கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.

ராம் கணேஷ் தனது சட்டத்தரணியூடாக இயக்குனர்கள் குழுவுக்கு அனுப்பிவைத்த கடிதம்.

விரிவான விசாரணைகள் ஆரம்பித்து தங்களுக்கு முழு கணக்கும், விளக்கங்களும் வேண்டும் என்றும், இது முற்று முழுதாக மாணவர்களின் பணம் என்றும், இதை ஒரு சிலர் தமது தேவைகளுக்கு தவறாக பயன்படுத்த அனுமதிக்கப்போவதில்லை என மாணவர் குழுக்கள் இயக்குனர் Maklane deWever கூறுகிறார்.

From left, Raneem Alozzi, Sherina Harris and Emma Sandri first reported on the spending irregularities for Ryerson’s student newspaper, The Eyeopener.

Ryerson மாணவர் ஒன்றியத்தின் (RSU) இயக்குநர்களின் குழுவினரில் இருக்கும் மாணவர்கள், எட்டு மாதங்களுக்கு மேல் அந்த பணத்தை செலவழித்ததற்கான காரணத்தை தெரிந்து கொள்ள விரும்பினர் என்று இயக்குனர்கள் குழுவில் மாணவர் குழு இயக்குனர் Maklane deWever கூறுகிறார்.

இன்று வெள்ளிக்கிழமை (Feb 01, 2019) நடந்த RSU இயக்குனர்கள் குழு கூட்டத்திற்கு சென்ற ஊடகங்கள் இன்று அனுமதிக்கப்படவில்லை என்றபோதும் கூட்டத்துக்கு வந்த மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் கூடியிருந்த ஊடகவியலாளர்களிடம் தமது கோபத்தையும், ஆதங்கத்தையும் வெளிக்காட்டினார்கள்.

இந்த மோசடியை தங்களால் நம்பமுடியவில்லை என்றும் தங்களுக்கு வெளிப்படையானதான விசாரணையும், விளக்கங்களும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என தமது உள்ளக்கிடக்கையை வெளிக்காட்டினார்கள் மாணவர்கள்.

முதன் முதலில் கடனட்டை ( கிரெடிட் கார்டு) அறிக்கைகள் ரயெர்சன் பல்கலைக்கழக மாணவர் செய்தித்தாள் The Eyeopener மூலம் வெளியிடப்பட்டது . 2018 ஆம் ஆண்டு மே மாதம் முதல் செலவழிக்கப்பட்ட செலவுகள் (தலைவர் ராம் கணேஷ் தனது பதவி காலத்தை துவங்கின நாள் முதல்)

கணேஷ் மற்றும் துணைத் தலைவர் சவ்ரீன் கோசல் மாணவர் சங்கத்தின் கடன் அட்டைகளை எடுத்துக் கொண்டு அதைத் தங்கள் தேவைக்கு பயன்படுத்தத் தொடங்கினர்.

குறித்த ‘செலவுகள் நிச்சயமாக அசாதாரணமானது’. குறிப்பிட்ட மாணவர் நிகழ்வுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டிருந்தால், அது தெளிவாக்கப்பட வேண்டும். “இது மிகவும் வருத்தமாக இருக்கிறது,” என்று மாணவர் குழுக்கள் இயக்குனர் Maklane deWeverகூறினார்.

2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தனது காலாண்டு நிதி அறிக்கைகளை விடுவிப்பதில் மாணவர் சங்கத்தின் செயலாளர் தோல்வி அடைந்த பின்னரே இவை ஒவ்வொன்றும் வெளியில் வர ஆரம்பித்தது. பல மாதங்களாக அறிக்கைகளை வெளியிடும் தாமதத்தை தொடர்ந்து கடந்த செவ்வாயன்று, கடன் அட்டை அறிக்கைகளை மதிப்பாய்வு செய்ய மாணவர் சங்கத்தின் கணக்காளர், கடந்த வியாழக்கிழமை விஷயத்தை இயக்குனர்களின் குழுவிடம் கொண்டு வந்தார்.

“அந்த செலவுகள் நிச்சயமாக அசாதாரணமாக இருந்தன, குறிப்பாக அத்தகைய செலவினங்களுக்கு உத்தரவாதமளிக்கும் அந்த தேதியைச் சுற்றியுள்ள எந்த நிகழ்வுகளையும் நான் அறிந்திருக்கவில்லை” என்று அவர் (DeWever) கூறினார்.

“அவை அனைத்தும் சட்டபூர்வமானவையாக இருக்கக்கூடும் என்று நாங்கள் முடிவு செய்யவில்லை, ஆனால் அது நிச்சயமாக சில மிக, மிகவும், சந்தேகமான கேள்விகளை முன்வைக்கிறது.” என்றார் அவர்.

முழுநேர இளங்கலை மாணவர்கள் செமஸ்டர் ஒன்றுக்கு $ 78.50 ஐ மாணவர் சங்கத்துக்கு கட்டாயமாக செலுத்துகின்றனர். இதிலேயே மாணவர் ஒன்றியம் இயங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழகம் இப்பொழுது இதில் தலையிட்டுள்ளது.

இந்த பணம் சொந்த செலவுகளுக்கு பாவிக்கப்பட்டிருந்தால் அவர்கள் சட்டத்துக்கு முன் நிறுத்தப்படுவார்கள் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Source: https://www.cbc.ca/news/canada/toronto/ryerson-students-union-spending-1.4993685