மில்ட்டன் பகுதியில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்ட ஆண் ஒருவர், ஆபத்தான நிலையில்

இன்று வெள்ளிக்கிழமை (Feb 01, 2019) பிற்பகல் வேளையில் மில்ட்டன் பகுதியில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்ட, சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Main Street East மற்றும் Maple Avenue பகுதியில் அமைந்துள்ள சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில், இன்று பிற்பகல் 2.55 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த அந்த பகுதியில் பல்வேறு துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து அங்கு விரைந்ததாகவும், சம்பவ இடத்தில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க குறித்த அந்த நபர் பலத்த காயங்களுடன் காணப்பட்ட நிலையில், உடனடியாகவே அவர் ஹமில்ட்டன் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் ஹமில்ட்டன் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் பெருமளவான காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதனால், அந்த பகுதி ஊடாக பயணிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.