சிங்களத்தின் சுதந்திர நாள் – கண்டனப் போராட்டத்துக்கு அழைப்பு.

“துக்க நாள்” சிங்களத்தின் சுதந்திர நாள் தமிழரின் துக்க நாள்


கனடிய மண்ணில் ஸ்கார்புரோவில் எதிர் வரும் பெப்ரவரி 4 அன்று Chandini Banquet மண்டபம் என அழைக்கப்பட்ட Grand Cinnamon Banquet Hall 3885 McNicoil, Scarborough இல் அமைந்துள்ள விருந்துபசார மண்டபத்தில் நடைபெறவுள்ள சிறீலங்காவின் சுதந்திர தினத்திற்கான கண்டனப் போராட்டம்.

சிறிலங்காவின் 71வது சுதந்திர தினம் . இது சிங்களத்திற்குரியதே தவிர தமிழருக்கானதல்ல. உரிமைகள் மறுக்கப்பட்ட ஓர் இனமாக 71 ஆண்டுகளாக பல்வேறு வழிகளில் போராடி வரும் எமக்கு இன்றுவரை எந்தவொரு நீதியையும் வழங்காமல் தமிழ் மக்களை இரண்டாம் தரமக்களாக இன்றுவரை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கும் சிறிலங்கா அரசின் சுதந்திரதினத்தை வலிகளுடனும் வேதனைகளுடனும் ஆறாத காயங்களுடனும் வாழும் ஈழத்தமிழராகிய நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

பிரித்தானியரிடம் இருந்து சிங்களவரின் கையில் இலங்கை தீவின் ஆட்சி அதிகாரம் கையளிக்கப்பட்ட சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழரின் துக்கநாள்.

இவ்விருந்துபசார மண்டபத்தில்சிறீலங்காவின் சுதந்திரதின விழாவில் இனமான தமிழர் எவரையும் கலந்துகொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம் .

கனடிய தமிழ்ச் சமூகமும் கனடியத் தமிழ் மாணவர் சமூகமும் இணைந்து நிகழ்த்தும் இந்த கண்டன போராட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரும் எம் அடையாளங்களுடன் அணிதிரண்டு வந்து கலந்து கொள்ளுங்கள் என உணர்வோடும் உரிமையோடும் அழைக்கப்படுகின்றீர்கள்.

உணர்வுள்ள தமிழினமே எழுந்து வா, ஒன்றுபட்டு எம் விடுதலையை வென்றெடுப்போம்.

இடம்: Morningside & McNicoil சந்தி
காலம்: திங்கட்கிழமை
நேரம்: 4.00 மாலை