டொரோண்டோ பியர்சன் விமான நிலையத்தின் ஓடுபாதை பாதுகாப்பு குறைபாடுகள்!

டொரோண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை ஒழுங்கமைப்புக்கள், பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகளை கொண்டுள்ளதாக, போக்குவரத்து பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.


கடந்த ஐந்து ஆண்டுகளில், விமானங்கள் தவறான ஓடுபாதைகளை பயன்படுத்திய 27 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அது சுட்டிக்காட்டியுள்ளது.

தரையிறங்கும் விமானங்கள், இவ்வாறு தவறுதலான ஓடுபாதைக்குள் நுழைந்துள்ளதாகவும், போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவினரின் அறிவுறுத்தல்களையும் தாண்டி இவ்விடயங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அது கூறியுள்ளது.

பியர்சன் சர்வதேச விமான நிலையத்தின் மிகவும் பரபரப்பான சூழல், மற்றும் ஓடுபாதைகளின் வடிவமைப்பிலுள்ள சிக்கல்கள் ஆகியன, இக்குழப்பங்களுக்கு காரணங்களாக அமைந்துள்ளதாகவும், போக்குவரத்து பாதுகாப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.