கியூபாவிலுள்ள கனேடிய தூதரகத்தில் ஊழியர்களைக் குறைக்க நடவடிக்கை

கியூபாவிலுள்ள கனேடிய தூதரகத்தில் பணியாற்றும் கனேடியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


மற்றுமொரு கனேடிய தூதரக ஊழியர் கியூபாவில் மர்ம நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒட்டாவா அதிகாரிகள் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர்.

இதனால், எதிர்காலத்தில் தூதரகம் திறந்திருக்கும் பட்சத்திலும் சில சேவைகள் பாதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நொவம்பர் மாதம் முதல் பரவிவரும் இந்த மர்ம நோயினால் இதுவரை 14 கனேடியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மயக்கம், குமட்டல் மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.