கனடிய தேர்தல்களில் அந்நிய தலையீடுகளை தடுக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு.

கனடிய தேர்தல்களில், வேறு நபர்கள் அல்லது நாடுகளின் தலையீடுகளை தடுக்கும் திட்டமொன்றை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.


இவ்வாறான ஒரு சூழல் வருமிடத்து, கனடிய மக்களை எச்சரிக்கும் பொறிமுறையாக, இது அமையவுள்ளது. ஐக்கிய அமெரிக்க தேர்தலில், டொனால்ட் ட்ரம்பின் வெற்றியை உறுதிசெய்யும் நடவடிக்கைகளில், ரஷ்யா ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தல் தலையீடுகள் தொடர்பிலான தகுந்த நெறிமுறைகள் அமெரிக்காவில் இல்லாதமையால், ரஷ்யாவின் தலையீடுகள் தொடர்பிலான விபரங்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் தலையீடுகள் தொடர்பில், ஏனைய G7 நாடுகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக, கனடிய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் தெரிவித்துள்ளார்.