கனேடிய பாராளுமன்றில் சிறப்பாக நடைபெற்ற தமிழ் மரபுத் திங்கள் விழா

ஒட்டாவா தமிழ் ஒன்றியம் ஒருங்கமைத்து நடாத்திய தமிழ் மரபுத் திங்கள் விழா தை 27 2019 அன்று ஒட்டாவா பாராளுமன்றில் சிறப்பாக நடைபெற்றது. 250 க்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இந் நிகழ்வில் பழந்தமிழர் பாரம்பரியத்தை பேணும் வண்ணம் நடன நிகழ்வுகள், இசை, களரி போன்றன இடம்பெற்றது.


கனடிய பூர்விக மண்ணின் ஆசீர்வாதம், கனடியத் தேசிய கீதம், தமிழ்மொழி வாழ்த்து மற்றும் இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்புப் போரில் உயிரிழந்தவர்களுக்கும், கனடாவின் சார்பாக போர்க்களங்களில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கும் ஒரு நிமிட அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

Nepean பிராந்தியத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர் Anitha Vandenbeld பாராளுமன்ற உறுப்பினர் Chandra Arya உடன் இணைந்து கனேடிய பிரதமர் கௌரவ.ஜஸ்டின் ட்ரூடோ வின் செய்தி மற்றும் ஒட்டாவா தமிழ் பாரம்பரிய மாத விருந்துபசாரத்துக்கு வாழ்த்துக்களையும் வாசித்தார்.

ஒன்றாரியோ மாகாண அமைச்சரும் தமிழ் மரபுத்திங்கள் வரைபை ஒன்றாரியோ மாகாணத்தில் முழு உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றிய Todd Smith அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார். கௌரவ Todd Smitth அவர்கள் ஒன்றாரியோ ஆளும் கட்சியின் பாராளுமன்ற தலைவராகவும் அரச மற்றும் நுகர்வோர் சேவை அமைச்சராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்றாரியோ மாகாண சமூக, மற்றும் சிறுவர் துறை அமைச்சரான Hon. Lisa MacLeod அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் ஒட்டாவா Nepean பிராந்திய பாராளுமன்ற உறுப்பினர் என்பதும் குறிப்பிட தக்கது.

கனடாவின் தலைநகரின் Carleton பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் Richard Mann தமிழர்கள் மீதான இனப்படுகொலைகளுக்கு பின்னரும் மீண்டெழுகின்ற பண்பு பற்றி சிறப்புரை ஆற்றினார். அவர் தமிழர் தாயகமும் இலங்கை தீவில் தமிழர் இனப்படுகொலையும் எனும் தலைப்பிலான இரண்டாம் சர்வதேச ஆய்வு மாநாட்டின் இரண்டாம் நாள் சிறப்புரை ஆற்றி ஆய்வறிக்கை சமர்பித்தவர் என்பது குறிப்படித்தக்கது. தமிழர்களின் தொய்மை வரலாறுகளையும் சைவ சமய தொய்மை பற்றியும், தமிழ் கடவுள் முருகன் பற்றியும் ஆய்வு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவின் அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த பிரதிநிதிகளும் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்வில் உரையாற்றி இருந்தனர். பேச்சாளர்கள் அனைவரும் கனடாவின் வளர்ச்சியில் கனடியதமிழர்களின் காத்திரமான பங்களிப்பை நன்றியுடன் நினைவு கூர்ந்தனர்.

நிகழ்வின் மேலும் ஒரு சிறப்பம்சமாக ரொரண்டோ, மிசிசாகா மற்றும் மொன்றியல், போன்ற நகரங்களில் இயங்கி வரும் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பெருமளவில் பங்கேற்றனர். Toronto, Montreal போன்ற நகரங்களில் இருந்து வந்த சிறந்த கலைநிகழ்வுகளும் இந்த நிகழ்வில் அமையப்பெற்றிந்தது.

இராப்போசனத்துடன் ஒழுங்கமைக்கப்பட்ட இந்நிகழ்வு கனடா முழுவதும் தை மாதம் கொண்டாடப்படும் தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டங்களுக்கு மேலும் சிறப்பூட்டுவதாக அமைந்தது.

இந்த ஒட்டாவா தமிழ் பாரம்பரிய பண்டிகையானது சமூக ஊடகங்கள் மற்றும் பிற ஊடகங்கள் வழியாக நேரடி ஒளிபரப்பப்பட்டது.
நிகழ்வில் கனடாவின் மாநகர, மாகாண, மத்திய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பின்னவரும் தலைவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

 • Ottawa Mayor Hon. Jim Watson
 • Ontario Provincial Minister Hon. Todd Smith
 • Ontario Provincial Minister Lisa Macleod
 • Member of Parliament Anita Vandenbeld
 • Member of Parliament Garnett Genuis 
 • Member of Parliament Chandra Arya
 • Ontario Provincial Liberal interim leader MPP John Fraser
 • Member of Parliament Peter Kent
 • Member of Parliament John Brassard
 • Member of Parliament Cathay Wagantall
 • Member of Parliament Irene Mathyssen
 • Member of Parliament Bob Saroya
 • Amnesty International representative Mr John Argue

Ottawa Tamil Association, Tamil Heritage Month Gala 2019 at Parliament

The Ottawa Tamil Association held a dinner gala at the Parliament of Canada in Ottawa to celebrate the Tamil Heritage Month on Sunday, January 27, 2019. The event took placed at Sir John A. Macdonald Building which was built in 1930 based on Beaux-Arts architecture.

The evening was well attended by over 250 guests, including several federal, provincial and city representatives to commemorate the ancient Tamil heritage, art and culture.

The guest of honour and keynote speaker for the evening was associate dean Richard Mann of Carleton University. He presented his essay that argues the Sri Lankan government constructed definitions of Tamils as ‘terrorists’, ‘separatists’, and ‘anti-national’ in an attempt to disguise state violence against the Tamil community in Sri Lanka as anti-terrorist as opposed to state generated violence. The essay was recently presented at the Second international conference on Tamil Nationhood and Genocide in Sri Lanka, which took place at Carleton University in Ottawa, May 2018.

Classical dances, Tamil vocal and musical performances, ancient Tamil martial arts practice, exhibits of Tamil culture and insightful speeches by the youth kept the guests entertained. Performances were contributed by Canadian tamil youths from Toronto, Montreal and Ottawa communities. The evening also marked an end to the month-long Tamil Heritage Month festivities by Tamil Canadians from coast to coast.

Tamil Canadians are one of the most diligent growing communities proudly representing the diverse multicultural concept of Canadian society. Tamil heritage month is an opportunity to acknowledge the contributions of Tamil Canadians to the Canadian society and the Tamil culture.

The Tamil Heritage Month Act – Bill 156 was passed in the province of Ontario on March 25, 2014. On October 2016, the House of Commons voted unanimously on a motion to recognize January as Tamil Heritage Month. The City of ottawa proclaimed January as Tamil Heritage month, January 2018.

The Member of Parliament for Nepean, MP Anita Vandenbeld of the liberal party, delivered the Prime Minister Hon. Justin Trudeau’s message and wishes at the Ottawa Tamil Heritage month Gala, along with MP Chandra Arya. The Prime minister acknowledged the countless contributions made by Tamil Canadians to Canada.

Ontario Provincial Minister Hon. Todd Smith mentioned that it took him five attempts to put forward the Tamil Heritage Month Act at the Ontario legislature, before attaining unanimous support. He was able to successfully get Bill-156 passed on March 25, 2014. He said on behalf of Premier Doug Ford and his caucus, they are proud of such an achievement.

Ottawa Mayor Hon. Jim Watson graciously participated and generously greeted the attendees. Mayor Jim Watson also commenced the lighting of auspicious lamp, followed by federal and provincial members of parliament and dignitaries. The opening ceremony included First Nations blessings, Canadian national anthem, Tamil mozhi Valthu and a moment of silence.

Ontario Provincial Minister Lisa Macleod in her address mentioned that success stories of Canadian Tamils within the community, escaping the Genocide of Sri Lanka.

Ontario Provincial Liberal interim leader MPP John Fraser spoke of the importance of celebrating Tamil Heritage Month and diversity.

MP Garnett Genuis mentioned, Jan 27th is also Holocaust remembrance day and one of his motivations is to fight for justice. “Think about Holocaust, the never again, but it takes place again”, he said in his address. He also mentioned that Maknity act should be considered in the case of Sri Lanka, given the severity of human right violations.

MP Peter Kent of Thornhill Ontario, MP John Brassard of Barrie – Innisfil, MP Cathay Wagantall of Yorkton – Melville, Saskatchewan. MP Irene Mathyssen of London Ontario, MP Bob Saroya of Markham Unionville, Mr John Argue the coordinator to Sri Lanka for Amnesty International were also present and participated at the Gala.

Ottawa Police deputy chief Uday Singh Jaswal was in attendance and delivered a speech on behalf of Ottawa Police Services. Deputy chief Mr. Nishan Duraiappah from Halton regional police services in his address spoke about community success stories and contributions to Canada by Canadian Tamils. Amnesty International representative Mr. John Argue delivered his speech based on this experience with Sri lanka and mentioned that how they get away with accountability by changing the government.

The event was attended by many Tamil organizations from Montreal, Ottawa, Toronto, Mississauga and Brampton. The event was hosted in Tamil, English and French. It was broadcasted live via social media and other media channels.