இலங்கை ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான டொரோண்டோ இலங்கை துணை தூதரகத்தின் நடமாடும் சேவை!

டொரோண்டோ இலங்கை துணை தூதரகம் பிப்ரவரி 9, 2019 அன்று காலை 9.30 மணி முதல் மாலை 1.30 மணி வரை டொரோண்டோவில் வசிக்கும் இலங்கை ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான நடமாடும் சேவை ஒன்றை ஏற்பாடுசெய்துள்ளது.


டொரோண்டோ – இலங்கையின் துணை தூதரகத்தின் அலுவலகத்திற்கு வருகைதரும்போது ரொறொன்ரோவில் உள்ள முதிய இலங்கை குடிமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்தில் கொண்டு, துணைத் தூதரகம் 2019 பிப்ரவரி 9 ஆம் திகதி, இலங்கை ஓய்வூதியம் பெறுவோருக்கு ஸ்ரீ வரசித்தி விநாயகர் சமூக மையத்தில் இந்த நடமாடும் சேவையை ஒழுங்குசெய்துள்ளது.

இந்த நாளில் உதவி பெற விரும்பும் எந்த இலங்கை ஓய்வூதியதாரரும், ஸ்ரீ வரசித்தி விநாயகர் சமூக மையத்துக்கு பின்வரும் ஆவணங்களை, நகல்களுடன் கொண்டு வந்து சேவையை பெற்றுச்செல்லலாம்.

  1. செல்லுபடியான கடவுச்சீட்டு (Valid original Passport)
  2. ஓய்வூதிய அடையாள அட்டை,(Pension Identity Card /இருக்கும் பட்சத்தில்)
  3. Application for Life Certificate -2019

மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ள 416-323-9133 / 416-323-0736 அல்லது srilanka@bellnet.ca

K.S. Jayaweera
Consul General
Consulate General of Sri Lanka -Toronto