ஒரு டொலர் பீர் (buck-a-beer)!

ஒண்டாரியோ மாகாண முதல்வர் திரு. டக் போர்ட்டினால் (Premier Ford) சென்ற வருடம் ஆகஸ்ட் 27ம் திகதி அறிமுகம் செய்யப்பட்ட ஒரு டொலர் ($1) பியர் (buck-a-beer) பெப்ரவரி 11ம் திகதியில் இருந்து $1.25 டொலராக உயர்வடைகிறது.


கடந்த ஆண்டு இதனை அறிமுகம் செய்த பொழுதே விலை உயர்வைத்தொடங்க திட்டமிட்டிருந்தனர்.

இந்த மலிவு விலை பியர் (Beer) 2019 இன் நீண்ட வார விடுமுறைகளில் ஒரு டொலராகவே விற்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு டொலர் பியர்கள் LCBO மற்றும் பீர் ஸ்டோர் (Beer Store) மூலம் விற்பனையாகும்.

சென்ற மாகாண சபை தேர்தலில் ஒன்ராறியோவில் மலிவு விலை பியர் ஒரு டொலருக்கு கிடைக்கும் என போர்ட் கூறியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.