அல்பேர்ட்டாவில் பாடசாலை பேருந்துகளுக்கு ஆசனப்பட்டி கட்டாயம் : போக்குவரத்து அமைச்சர்

அல்பேர்ட்டா மாகாணத்தில் இயங்கும் பாடசாலை பேருந்துகளில் ஆசனப்பட்டி தற்போது கட்டாயமாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.


கல்கரிக்கு தெற்கே ஒரு பாடசாலைப் பேருந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் படுகாயமடைந்தனர். இதில் பேருந்தின் சாரதியும், மாணவர்கள் சிலரும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய அமைச்சர் பிரையன் மேசன், மாகாணத்தில் இயங்கும் பாடசாலைப் பேருந்துகளில் ஆசனப்பட்டியைக் கட்டாயமாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இந்நிலையில் இதுகுறித்து போக்குவரத்து அமைச்சு தற்போதைய கொள்கையை அடிப்படையாகக் கொண்ட புதிய செயற்திட்டத்தை முன்னெடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

குறித்த திட்டத்தை விரைவில் அமுல்படுத்த தான் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் பிரையன் மேசன் தெரிவித்துள்ளார்.