உரிமத்துக்கும் அதிகாமான கஞ்சா செடி வளர்ப்பு இடம் கண்டுபிடிப்பு.

அரோரா (Aurora) பகுதியில் கஞ்சா வளர்க்க உரிமம் பெறப்பட்டு அதனை வளர்த்து வந்த ஒரு உள்ளரங்க வளர்ப்பு இடத்தை யோர்க் பொலிசார் சோதனை செய்ததில் அங்கு வழங்கப்பட்ட அனுமதிக்கும் அதிகமாக கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. தீ பாதுகாப்பு சோதனை (Fire safety inspection) செய்ய சென்ற தீயணைப்பு பகுதியினரால் இது கண்டுபிடிக்கப்பட்டு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.


மருத்துவ தேவைகளுக்கான 1752 கஞ்சா செடிகளை வளர்க்க உரிமம் வழங்கப்பட்டிருந்த இடத்தில் சுமார் 6000 செடிகள் வளர்க்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இது சம்பந்தமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள், மூவரும் கஞ்சா வளர்க்கும் உரிமம் கொண்டவர்கள் அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 17ம் திகதி முதல் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டபின் கறுப்பு சந்தையில் கஞ்சா விற்பனையில் அதிகளவு இலாபத்தை பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறு பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டு சட்டபூர்வமற்று விற்பனை செய்யப்படுவதுஅதிகரித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.