கொலையாளி ப்ரூஸ் மக் ஆர்தர் (Bruce McArthur) தனது எட்டு கொலைகளையும் ஒத்துக்கொண்டார்.

தொடர் கொலையாளி ப்ரூஸ் மக் ஆர்தர் (Bruce McArthur) 2010 முதல் 2017 வரை கொல்லப்பட்ட எட்டு கொலைகளையும் ஒத்துக்கொண்டு தனது குற்றத்தை ஒத்துக்கொண்டார்.


டொரோண்டோவில் தொடர் கொலை குற்றவாளி Bruce McArthur இன்று (செவ்வாய் January 29, 2019) காலை 9:30க்கு நீதிமன்றில் முன்நிலைப்படுத்தப்பட்டார் .

Lawyers arrive at city court in Toronto in advance of Bruce McArthur’s hearing on Tuesday – Jan 29, 2019.

இந்த நீதிமன்ற முன்னிலைப்படுத்தலிலேயே கொலையாளி ப்ரூஸ் மக் ஆர்தர் (Bruce McArthur) தனது எட்டு கொலைக்குற்றத்தையும் ஏற்றுக்கொண்டார்.

Bruce McArthur இரண்டு தமிழர்கள் உட்பட் மொத்தம் எட்டுப்பேரை கொலை கொலை செய்த குற்றத்துக்காக கடந்த வருடம் கைதுசெய்யப்பட்டு, பல இடங்களில் இவரால் கொன்று புதைக்கப்பட்ட உடல்பாகங்களை காவல் துறையினரால் தோண்டி எடுக்கப்பட்டு விசாரணைகள் மேட்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நீதிமன்றத்தில் குற்றவாளி McArthur தரப்பில் அவரது வழக்கறிஞர் ஜேம்ஸ் Miglin உடனிருந்தார்.

கொல்லப்பட்ட எட்டு பெயர்களையும் நீதிமன்றத்தில் படிக்கும் போதும் Bruce McArthur எவ்வித சலனமும் இன்றி இருந்தார்.

இறுதியாக எட்டு பெயர்களையும் படிக்கும் போது எட்டு முறை “குற்றவாளி ” என்பதை எவ்வித உணர்ச்சியையும் காட்டாது ஒத்துக்கொண்டார்.

நீதிமன்றில் இந்த வழக்கின் சில சுருக்கங்கள் படிக்கப்பட்டது.

Bruce McArthur தனது பாதிக்கப்பட்டவர்களிடம் நகைகள் மற்றும் குறிப்பு புத்தகம் (Notebook ) போன்ற பொருட்களை வைத்திருந்தார். இவைகளும் சாட்சிகளாகவோ, தடயங்களாகவோ இந்த வழக்கில் உதவுகின்றது என அந்த சுருக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் ஒவ்வொரு கொலைகளும் திட்டமிடப்பட்டு, வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அனைத்து கொலைகளும் பாலியல் நடவடிக்கைகளுடன் தொடர்பு பட்டது என்றும் அரச தரப்பு வழக்கறிஞர் இன்று நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பிலான மேலதிக விபரங்கள் அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் எனவும், அதன்போது இவருக்கான தீர்ப்பும் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.