லிபரல் தேர்ந்தெடுக்கப்பட்டால், கனடியர்கள் அதிக வரி செலுத்த வேண்டி ஏற்படும் – கன்சர்வேடிவ் தலைவர் எச்சரிக்கை!

அடுத்த தேர்தலில் மீண்டும் லிபரல் அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டால், கனடியர்கள் அதிக வரி செலுத்த வேண்டி ஏற்படும் என கன்சர்வேடிவ் தலைவர் அண்ட்ரூ ஷெர்ர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


மேலும் இது குறித்து விவாதிக்க கன்சர்வேடிவ் தலைவர் தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும், புதிய வேட்பாளர்களுடனும் மூன்று நாள் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்தார்.

இது குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து தெரிவித்த அவர், லிபரல் அரசாங்கத்தின் குறைபாடுகள் தொடர்பில் பட்டியலைக் குறிப்பிட்டு, அதில் குறிப்பாக நிதி பற்றாக்குறையை சுட்டிக்காட்டினார்.

இந்த வார இறுதியில் இடம்பெற்ற விடயங்களை சுட்டிக்காட்டிய அவர், ஜஸ்டின் ரூடோ மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், வரி அதிகரிக்கும் எனவும் கூறினார்.

அத்தோடு அவருக்கு நான்கு ஆண்டுகளுக்கு மேலதிகமாக வழங்கப்பட்டிருந்தால், எரிபொருள், உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு குறித்த ஆண்டுகளில் மேலும் வரி அதிகம் செலுத்த வேண்டி ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.