மாகாண அரசின் நிதி மலிவான வீட்டுவசதிக்கு உதவும் – பசுமைக் கட்சி தலைவர்

நகரங்களில் உள்ள தொழிற்துறை மற்றும் வணிக நிலங்களை சுத்தம் செய்வதற்காக மாகாண அரசின் நிதியளிக்கும் திட்டங்கள் மூலம் மலிவு வீட்டுவசதிக்கு உதவும் என ஒன்டாரியோவின் பசுமைக் கட்சி தலைவர் மைக் ஸ்க்ரீனர் தெரிவித்துள்ளார்.


பழுப்பு நிலப்பகுதிகள் என்றும் அழைக்கப்படும் நிலங்கள் தற்போது பயன்பாட்டில் இல்லை அல்லது குறுகிய பயன்பாட்டிலேயே காணப்படுகின்றது.

இந்நிலையில் ஒன்டாரியோ முழுவதும் நகர்ப்புற எல்லைகளுக்குள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பழுப்பு நிலப்பகுதி தளங்கள் உள்ளன என மைக் ஸ்க்ரீனர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த தளங்களை மீண்டும் மேம்படுத்துவதற்கான செலவுகள் அதிகம் என கூறிய அவர், ஒரு புதிய கட்டிடத்தைத் தொடங்குவதற்கு முன்பே, நச்சுகள் அல்லது மாசுகளை சுத்தம் செய்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறினார்.

அவ்வாறு நகரங்களில் உள்ள தொழிற்துறை மற்றும் வணிக நிலங்களை சுத்தம் செய்வதற்காக மாகாண அரசு நிதியளிக்கும் திட்டங்களை கொண்டுவருவதன் மூலம், வீடுகளை மலிவு விலையில் பெற்றுக்கொள்ள உதவும் என அவர் மேலும் கூறியுள்ளார்.