கனேடிய வான்பரப்பினுள் நுளைந்த ரஷ்ய போர் விமானங்கள்!

கனேடிய வான் பரப்பினுள் நுளைந்த ரஷ்யாவின் இரண்டு போர் விமானங்கள் தடுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டதாக இராணுவத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.


வட அமெரிக்க கரையோர பகுதி வழியாக கனடாவின் எல்லைப் பரப்புக்குள் நுளைந்த ரஷ்யாவின் Tu-160 “பிளக் ஜக்” குண்டுவீச்சு விமானங்கள் இரண்டினை, தமது இரண்டு F-22 மற்றும் இரண்டு CF-18 பேர் விமானங்கள் இனங்கண்டு தடுத்து நிறுத்தியதாகவும், பின்னர் அவை கனேடிய மற்றும் அமெரிக்க யுத்த விமானங்களின் பாதுகாப்புக்கு மத்தியில் எல்லைப் பகுதிக்கு வெளியே அழைத்துச் சென்று விடப்பட்டதாகவும், இதன்போது இந்த மூன்று நாட்டு போர் விமானங்களுக்கும் இடையே முரண்பாடுகள் எவையும் ஏற்படவில்லை என்றும் வட அமெரிக்க வான்பரப்பு பாதுகாப்பு கட்டளைப் பணியகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த பிராந்தியங்களை தாம் விமானங்கள், ராடர்கள் மற்றும் செய்மதிகள் மூலம் கண்காணித்து வருவதாகவும், குறித்த அந்த பகுதி கனேடிய விமானப் படையின் சுற்றுக்காவல் பிராந்தியம் எனவும், அது விபரம் வெளியிட்டு்ளளது.