கனடிய மண்ணில் இன்றுமுதல் ஒரு புதிய பத்திரிக்கை – தேடிப்பார்

கனடாவில் கடந்த பலவருடகாலமாக சிறந்தமுறையில் இயங்கிவரும் தேடிப்பார் வர்த்தக கையேடு நிறுவனத்தினர் தமிழர் திருநாளாம் தை பொங்கல் நாளில், இன்றுமுதல் மாதாந்த பத்திரிகை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.


Thedipaar Paper Release

இன்று தைப்பொங்கல் தினத்தில் நிறுவனத்தின் அதிபர் திரு. குமார் தில்லைநாதன், அவர் துணைவியார் வாசுகி, மற்றும் தை பொங்கல் தினத்தில் கனடா ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் கனடா ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ விஜயகுமாரக்குருக்கள் (ஐயாமணி ஐயா- பிரதமகுரு, ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்) அவர்களால் முதல் பிரதி வெளியிட்டுவைக்கப்பட்டது.

தை பொங்கல் தினத்தில் கனடா ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் மகிழ்வுடன் தேடிப்பார் பத்திரிகையை தை பொங்கல் நாளில் பெற்றுச்சென்றனர்.

பத்திரிக்கைகள் பொதுவாக செய்திகளை மக்களுக்கு தந்து அவர்களே எது நல்லது, எது இல்லை என்று முடிவு செய்ய விட வேண்டும், தங்கள் கருத்துக்கள் மூலம் அவற்றை மக்களுக்கு அவர்களே கற்பிக்கக்கூடாது என்பது பத்திரிக்கை அல்லது ஊடக தர்மம்.

இந்த தர்மத்தை கடைப்பிடித்து தேடிப்பார் மேன்மேலும் வளரவேண்டும் என்று இச்சந்தர்ப்பத்தில் தேடிப்பாரின் இந்த முயட்சியை டொரோண்டோ தமிழ் வாழ்த்தி வரவேற்கின்றது.

More Photos

https://photos.tamilstar.com/Thedipaar-Paper-Release