ஜெனரல் மோட்டர்ஸ் தொழிற்சாலையினை மூடுவதன் எதிரொலி: விண்ட்சரில் பாரிய போராட்டம்

ஒஷவ பகுதியில் உள்ள ஜெனரல் மோட்டர்ஸ் தொழிற்சாலையினை மூடுவதற்கான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, விண்ட்சரில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.


ஒன்ராறியோவின் அனைத்து பாகங்களிலும் உள்ள வாகன தொழிற்சாலை ஊழியர்கள் ஒன்றிணைந்து நேற்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் 11 மணியளவில் இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் மாநாடு, நேற்று, விண்ட்சரில் நடைபெற்ற போதே இந்த போராட்டமும் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில், கிச்சனர், பிரம்ப்டன் மற்றும் லண்டன் உள்ளிட்ட அனைத்து நகரங்களில் உள்ள பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.

ஒஷவ பகுதியில் உள்ள ஜெனரல் மோட்டர்ஸ் தொழிற்சாலையினை மூடுவதற்கான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து ஏற்கனவே பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் இந்த வாரத்தின் ஆரம்பத்தில், ஒஷவவில் உள்ள ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவன பணியாளர்கள் இரண்ட நாள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தினையும் மேற்கொண்டிருந்தனர்.

ஒஷவ பகுதியில் உள்ள ஜெனரல் மோட்டர்ஸ் தொழிற்சாலையினை மூடுவதனால், சுமார் 2600 பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிபபிடத்தக்கது.