ஒட்டாவாவில் இரட்டை தட்டு பேருந்து விபத்து: மூவர் உயிரிப்பு- 23பேர் படுகாயம்

ஒட்டாவாவில் இரட்டை தட்டு பேருந்து விபத்துக்குள்ளானத்தில், மூவர் உயிரிழந்ததோடு, 23 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


வெஸ்ட்போரோ பேருந்து நிலையத்தின் நடைமேடையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது காயமடைந்தவர்கள் தற்போது, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 9 பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக ஒட்டாவா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், இப் பேருந்துந்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஒட்டாவாவில் அண்மைய காலங்களில் இடம்பெற்ற மிகப் பெரிய இரண்டாவது விபத்தாக, இவ்விபத்து பார்க்கப்படுகின்றது. கடந்த 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.