இலங்கையர் உட்பட ஒன்பது ஊழியர்கள் $60 மில்லியன் Lotto Max வெற்றியாளர்கள்!

தெற்கு ஒன்ராறியோவில் கோல்ப் நகரில் வாகன உட்பத்தி தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒன்பது சக ஊழியர்கள் சேர்ந்து எடுத்த Lotto Max க்கு $ 60 மில்லியன் ஜாக் போட் வென்றுள்ளது. (All nine employees worked the same production line on the same shift at Linamar Corporation)

கார் பாகங்கள் உற்பத்தி தொழிலாளர்கள் குழு டிசம்பர் 21, 2018 ல் எடுத்த சீட்டிலேயே இந்த வெற்றி கிடைத்துள்ளது.

லோட்டோ மேக்ஸ் ஜாக் பாட் $ 60 மில்லியனை தாண்டியபோது, ​​ இவர்கள் கடந்த 6 வார காலமாகவேதான் இந்த லொட்டோவை சேர்ந்து எடுக்கத்தொடங்கியிருந்தார்கள்.

“நாங்கள் வழமையாகவே எப்போதும் நகைச்சுவை யாகவே ஒருவருக்கொருவர் பழகுவோம், மற்றும் ஒருவருக்கொருவர் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வோம். இப்போது நாம் இந்த நம்பமுடியாத வெற்றியை ஒன்றாக கொண்டாடி வருகிறோம், என்று குழு தலைவர் அல ஹர்மீஸ், கூறுகின்றார்.

வெற்றி பெற்றவர்களில் மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆபிரிக்காவின் பகுதிகளில் இருந்து குடியேறியவர்கள், 21 முதல் 57 வயது வரை உள்ளனர்.

புதிய வாகனங்கள், புதிய வீடுகள் மற்றும் குடும்ப விடுமுறைக்கு என்று ஒவ்வொருவரும் தமது நிகழ்ச்சியை வகுக்க ஆரம்பித்துவிட்டனர்.

“நான் ஒரு வருடத்திற்கும் குறைவாக கனடாவில் இருந்து வந்திருக்கிறேன், இதுவரை நான் வேலைக்கு மட்டுமே வந்துசென்றேன். நாட்டை ஆராய்ந்து பார்க்க சுற்றிப்பார்க்க உள்ளேன்,” என்றார் பாஸ்ஸம் அப்தி.

“நாங்கள் மிகவும் ஆசிர்வதித்தவர்கள், மகிழ்ச்சியாகவும் நன்றியுள்ளவர்களாகவும் இருக்கிறோம்,” என்று அலா ஹர்மிஸ் கூறினார்.

இலங்கையை சேர்ந்த சம்பத் பத்திரிராஜா கூறும்போது, தான் இலங்கையில் தென்னம்தோப்பில் முதலிடப்போவதாக கூறினார்.

வெற்றிபெற்ற குழு உறுப்பினர்கள்.

Ala Hirmiz of Kitchener
Fernando Meneses of Guelph
Bassam Abdi of Kitchener
Ella Nicole Cabrera of Guelph
Mercedes Granadino of Guelph
Mussie Kelete of Guelph
Sampath Pathiraja Mudiyansel of Guelph
Steven Rush of Guelph
Tariku Birru of Guelph