டொரோண்டோ Woodbineஇல் 6 கார்கள் தீக்கிரை

டொரோண்டோ Woodbine குதிரைப் பந்தைய மைதானத்திற்கு வெளியே இன்று அதிகாலை வேளையி்ல் இடம்பெற்ற தீப்பரவல் சம்பவத்தில் ஆறு கார்கள் தீக்கிரையாகியுள்ளன.

Rexdale Boulevard மற்றும் நெடுஞ்சால 427 பகுதியில் உள்ள குறித்த அந்த மைதானப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒரு வாகனம் மட்டும் தீப்பற்றியுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்த போதிலும், அவர்கள் அந்த இடத்தினைச் சென்றடைந்த வேளையில், அங்கே மேலும் பல வாகனங்களில் தீப்பற்றியிருந்ததாக கூறப்படுகிறது.

எனினும் இந்தச் சம்பவத்தின் போது எவருக்கும் காயங்கள் ஏற்பட்டதான முறைப்பாடுகள் இல்லை என்று அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இது ஒரு சதிச்செயலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் காவல்துறையினர் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.