கனடாவில் அடிப்படை வட்டிவீதத்தில் மாற்றமில்லை

கனடாவில் அடிப்படை வட்டிவீதத்தை உயர்த்தாமல், 1.75 வீதத்திலேயே வைத்திருக்கவுள்ளதாக கனடிய மத்தியவங்கி இன்று அறிவித்துள்ளது.

எரிபொருள் விலைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் கனடிய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தற்காலிக உறுதியற்ற தன்மையால் மேலதிக வட்டிவீத உயர்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.

எனினும் எதிர்காலத்தில் நிச்சயமாக அடிப்படை வட்டிவீதம் உயர்த்தப்படும் எனவும், அது அவசியமானது என்றும் கனடிய மத்திய வங்கி மீண்டும் கோடிட்டு காட்டியுள்ளது.