ஒண்டாரியோவில் குறைந்த கட்டணத்துடனான வாகன காப்புறுதி விரைவில்!

ஒண்டாரியோவில், குறைந்த கட்டணத்துடனான வாகன காப்புறுதிகளை பெற்றுத்தரும் நோக்குடன், மாகாண வாகன காப்புறுதி அமைப்பு தொடர்பிலான மீளாய்வுகளை முற்போக்கு பழமைவாத கட்சி இன்று அரசு ஆரம்பித்துள்ளது.

வாகன காப்புறுதி துறையில் மேலதிக மேம்படுத்தல்கள் மற்றும் போட்டிகளை உருவாக்கும் பொருட்டு, சட்ட நடைமுறைக்கள், அதிகார வரம்புகள் போன்றன ஆராயப்படுமென அது அறிவித்துள்ளது.

அத்துடன், பெப்ரவரி 15 வரை, வாகன சாரதிகள், காப்புறுதி நிறுவனங்கள், பங்குதாரர்கள் உள்ளடங்கலானோருடன், கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.

கனடாவிலேயே அதிகூடிய வாகன காப்புறுதி கட்டணங்களை ஒண்டாரியோ மாகாணம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.