கனடாவில் தனது திறமைக்கு கிடைத்த பரிசுத்தொகையை முதியோர் இல்லத்துக்கு உதவிசெய்த புகைப்படக்கலைஞர்

Toronto வின் சிறந்த ஆளுமைகளை கண்டுபிடித்து அவர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து ஊக்கப்படுத்தும் பணியை Tekno Media நிறுவனம் கடந்த சில வருடங்களாக ஆற்றி வருகிறது.

அந்தவகையில் கடந்த வாரம், 2019 ஆண்டுக்குரிய 50 க்கும் மேற்பட்ட ஆளுமைகளுக்கு விருதுகளும், பண பரிசில்களும் வழங்கி கௌரவித்தனர்.

உலகின் முதலாவது (ரெக்னோ) தமிழ் இலத்திரனியல் ஒளி-ஒலிப்பதிவு சாதனத்தினை அறிமுகப்படுத்திய பெருமை ரெக்னோ மீடியாவையே சாரும்.

The President’s Talent Awards 2019 ஆளுமைகளில் ஒருவரான Selfie Moment of Event என்ற புகைப்பட நிறுவனத்தை நடத்திவரும் திரு செந்தூரன் சண்முகராஜா அவரது செயல் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

அவர் தனக்கு கிடைத்த பண பரிசை தாயகத்தில்; தர்மபுரம், கிளிநொச்சியில் இயங்கும் நமச்சிவாய மூதாளர் பேனகக்கத்தில் இருக்கும் முதியவர்களுக்கு இன்று (Jan 08, 2019) சிறப்பு உணவு வழங்கி மகிழ்ந்துள்ளார்.

கிடைத்த பணப்பரிசில் என்னால் முடிந்த சிறிய உதவி என திரு. செந்தூரன் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இவரது முன்மாதிரியை சகலருடனும் இணைந்து டொரோண்டோ தமிழும் வாழ்த்துகின்றது.

Photo Credit: Ravi Atchuthan