வயது வெறும் எண்ணிக்கையே!- நிரூபிக்கிறார் கனேடிய மூதாட்டி

வயது என்பது வெறும் எண்ணிக்கை மாத்திரமே என்பதை உறுதிப்படுத்தும் வகையில், நூறு வயதான கனேடிய மூதாட்டி ஒருவர் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.


கிழக்கு ஒன்ராறியோவின் கின்ங்ஸ்டன் நகரை சேர்ந்த இவர் தனக்கு நூறு வயதான போதிலும், ஒரு வகுப்புக்கேனும் தவறாது உடற்பயிற்சி மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

உடற்பயிற்சியின் மூலம் தான் மிகவும் பலமடைந்து வருவதாக தெரிவித்த குறித்த மூதாட்டி, வயது என்பது வெறும் எண்ணிக்கை மாத்திரமே என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது இளம் வயதில் ஆரம்பித்த இந்த உடற்பயிற்சியை தற்போதும் தவறாது செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூதாட்டியின் உற்சாகமான இச்செயற்பாட்டினால் தாம் மிகுந்த உத்வேகம் அடைவதாகவும், அவரது வருகை தமக்கு சாதகமாகவும், மகிழ்ச்சியாகவும் காணப்படுவதாக உடற்பயிற்சி மையத்தின் நிறுவுனர் தெரிவித்துள்ளார்.