ரொறன்ரோவில் வாகன தரிப்பிடங்களுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு!

ரொறன்ரோவில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாதாந்த மற்றும் மணி நேரங்களுக்கான வாகன தரிப்பிட கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.


இந்த அதிகரிப்பானது 160 வாகன தரிப்பிடங்களில் இடத்துக்கு இடம் வேறுபடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாதாந்தம் 5 டொலர் மற்றும் 30 டொலர் வரையிலான கட்டணங்கள் அறவிடப்படும் என்றும் அரைமணி நேரத்திற்கு 25 முதல் 50 சென்ற்ஸ் வரை அதிகரிக்கும் அன்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சிலமணிநேரங்களுக்கு வாகனத்தை நிறுத்தி வைக்கும் வாகன சாரதிகள் நாளாந்தம் அதிகபட்சமாக செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அதிக நேரம் வாகனத்தை தரிப்பிடத்தில் நிறுத்துபவர்கள் மற்றும் அதிகளவிலான வாகனத்தை நிறுத்துவர்களுக்கு அதிகபட்ச கட்டணங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரொறன்ரோ வாகனத் தரிப்பிட ஆணையம் அறிவித்துள்ளது.