பிரம்ப்டன் உணவகத்தில் துப்பாக்கிச் சூடு : சந்தேகநபரின் படத்தை பொலிஸார் வெளியிட்டனர்!

பிரம்ப்டன் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆணொருவரை தேடி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியையும் பொலிஸார் நாடியுள்ளனர்.

கடந்த வருடம் நொவம்பர் 21 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக பீல் பிராந்திய பொலிஸாரின் 25 ஆவது பிரிவு அவசரக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

ஆணொருவர் உணவகத்தில் உள்ளே வரவேற்பு அறைக்குள் நுழைந்து, கூரை மீது நோக்கி மூன்று துப்பாக்கிச் சூட்டினை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இருப்பினும் குறித்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான சி.சி.ரி.வி. காணொளிகளை கொண்டு விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் சந்தேகநபரின் படத்தை நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டனர்.

மேலும் குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் 905-453-2121, ext. 2133 அல்லது குற்றத்தடுப்பு பிரிவு இலக்கமான 1-800-222-TIPS (8477) க்கு தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.