ரொறன்ரோவில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் மருத்துவமனைக்குச் சென்ற நபர் – பொலிஸார் விசாரணை

ரொறன்ரோ க்ளென் பார்க் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவர் மருத்துவமனைக்குச் சென்றுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நேற்று (ஞாயிறுக்கிழமை) மாலை 5 மணியளவில், மற்றும் டஃப்பரின் தெரு பகுதியில் மூன்றிலிருந்து ஆறு துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதை அடுத்து 27 வயதான குறித்த நபர் மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மற்றும் குறித்த நபர் காயமடைந்துள்ளமை ஆகிய இரண்டு சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையனவா என்பது இன்னமும் தெரியவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.