43 ஆண்டுகளாக நிலவிவந்த வேலையில்லா பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது – புள்ளிவிபரம்!

கடந்த 43 ஆண்டுகளாக நிலவிவந்த வேலையில்லா பிரச்சினை தற்போது குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் கடந்த மாதம் 5.6 விகிதமாக இருந்த இப்பிரச்சினை இந்த ஆண்டு புதிதாக 9,300 வேலை வாய்ப்புக்கள் உருவாகியுள்ளதால் அதன் விகிதம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இது கடந்த 1976 ஆம் ஆண்டு ஜனவரி மதத்தை ஒப்பிடுகையில் வேலையின்மை விகிதம் மிகக் குறைவாக கொண்ட இரண்டாவது மாதமாக காணப்படுகின்றது என கனடா புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை 2019 இல் 5,500 வேலை வாய்ப்புக்கள் மற்றும் வேலையின்மை விகிதம் 5.7 ஆக இருக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்த்தனர்.

அத்தோடு சமீபத்திய தொழிலாளர் கணக்கெடுப்பின் படி ஊதிய வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பாக டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் 1.49 சதவீதமாக இருந்தது என்றும் சுட்டிக்காட்டினர்.

குறிப்பாக 2018 கைக்கெடுப்பின் படி 163,300 புதிய வேலைகள் 0.9 சதவீதம் அதிகரிப்பு காணப்படுவதாகவும், இது 2017 ல் 2.3 சதவிகிதம் மற்றும் 2016 ல் 1.2 சதவிகிதம் ஒப்பிடுகையில் வளர்ச்சியை காட்டுவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.