ரொறன்ரோவில் குடியிருப்புகளின் வாடகை விலை மேலும் அதிகரிப்பு!

ரொறன்ரோவில் இந்த வருடம் முதல் குடியிருப்பு ஒன்றினை வாடகைக்கு எடுப்பதற்கு, கடந்த வருடத்தை விட அதிக பணம் செலுத்த வேண்டி ஏற்படும் என அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேசிய வாடகை தொடர்பில் அறிக்கை தயாரிக்கும் Rentals.ca மற்றும் Bullpen நிறுவனங்களின் ஆராய்ச்சியில் இருந்து குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்பிரகாரம் இந்த வருடம் ஆரம்பம் முதல் 11 விகிதத்தால் குடியிருப்பு வாடகை கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவே நாடு முழுவதும் சராசரியாக 6 சதவிகித அதிகரிப்பு என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் ஒன்று அல்லது இரண்டு படுக்கையறை அபார்ட்மெண்ட்டின் சராசரி விலை ஒரு மாததிற்கு  $ 2600 ற்கு மேல் செல்லும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.