ஸ்காபரோவில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து!

ஸ்காபரோவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், அது குறித்த விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.


கொமாண்டர் வூல்வர்டு பகுதியில் உள்ள உள்ள “எஸ்டீ லாடர்” எனப்படும் தொழிற்சாலையின் வளாகத்திலேயே நேற்று (வியாழக்கிழமை) காலை 4 மணியளவில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த போது, தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்ததாகவும், எனினும் பலத்த முயற்சியின் பின்னர் தற்போது தீப்பரவல் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தீப்பரவல் ஏற்பட்ட உடனேயே குறித்த அந்த கட்டிடத்தினுள் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேறற்ப்பட்ட நிலையில், எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

எனினும் தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை எனவும், குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ரொரன்ரோ தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.