பேருந்து தரிப்பிடத்தில் வாகனம் மோதியதால் இளைஞர் படுகாயமடைந்தார்

பிரம்டன் பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடம் ஒன்றின் மீது வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஆண் ஒருவர் படுகாயமடைந்ததாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கென்வூவ் பவுல்வர்ட் மற்றும் ஃபின்ச் அவென்யூ பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) காலை ஏழு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது 21 வயதான இளைஞர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் காணப்படுகின்ற போதிலும், அவர் இன்னமும் ஆபத்தான நிலையிலேயே உள்ளதாக பொலிஸார் பின்னர் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இடம்பெற்ற வேளையில், குறித்த அந்த இளைஞர் மட்டுமே அந்த பேருந்து தரிப்பிடத்தில் இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ள போதிலும், குறித்த அந்த வாகனம் என்ன காரணத்தினால் பேரூந்து தரிப்பிடத்தின் மீது மோதியது என்பது இன்னமும் தெளிவாகவில்லை.