அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனா விஜயம்!

ஒட்டாவா மற்றும் பீஜிங்கிற்கு இடையிலான அரசியல் பதற்றநிலைகளுக்கு மத்தியில், கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், செனட்சபை உறுப்பினர்களும் சீனாவிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அதற்கமைய, செனட் உறுப்பினர்களான விக்டர் ஓஹ், ஜோசப் டே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மைக்கல் கூப்பர், கெங் டான், மஜிட் ஜவ்ஹாரி, சந்திர ஆர்யா ஆகியோர் நாளை (சனிக்கிழமை) சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

ஹுவாவி அதிகாரி கனடாவில் கைது செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மூன்று கனடியர்கள் சீனாவில் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறான கைது சம்பவங்கள் இருநாடுகளுக்கும் இடையே அரசியல்ரீதியான பதற்றத்தை தோற்றுவித்துள்ள நிலையில், கனடா – சீனா சட்டமன்ற சங்கத்தின் ஏற்பாட்டில் இருநாட்டு அதிகாரிகளும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.