ஸ்கார்பாரோ கிழக்குப்பகுதியில் துப்பாக்கிச்சூடு, இளையர் படுகாயம்.

ஸ்கார்பாரோவில் ஷெப்பர்ட் & கிங்ஸ்டன் அருகே சூட்டு சம்பவம் ஒன்று இன்று வியாழன் (Jan 03, 2019) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

Shallice Crt & Durness Ave அருகே போலீசாருக்கு கிடைத்த அவசர அழைப்பின் பேரில் (911 Call) அங்கு சென்ற போலீசார் Shallice CRT வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றினுள் மார்புப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் உயிருக்கு ஆபத்தானநிலையில் இருந்த 30 வயது மதிக்கத்தக்க ஆணொருவரை அவசரமாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

போலீசார் தமது ஆரம்பகட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள்.