சட்டவிரோதமாக வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டு – ரொறன்ரோ, யோர்க் பிராந்தியங்களில் 2158 பேர் கைது!

கடந்த 2018 ஆம் ஆண்டு சட்டவிரோதமான முறையில் வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டில் ரொறன்ரோ பொலிஸாரால் 1,116 பேரும் யோர்க் பிராந்திய பொலிஸாரால் 1,650 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ரொறன்ரோவில் 74 பேர் பேர் போதை மருந்து பாவனை தொடர்பிலும் 1,042 பேர் மதுபானம் அருந்திவிட்டு வாகனம் செலுத்தியவர்களும் ஆவர்.

குறிப்பாக இதில் 170 பேர் கடந்த ஆண்டின் நவம்பர் தொடக்கம் மற்றும் டிசம்பர் மாதத்தின் 31 ஆம் திகதிக்குள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் கடந்த வருடம் 2018 கஞ்சா பாவனை சட்டப்பூர்வமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.