மத்திய அரசின் கார்பன் வரி விதிப்பிற்கு கொன்சவேற்றிவ் எதிர்ப்பு

கனேடிய மத்திய அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள கார்பன் வரி விதிப்பிற்கு, கொன்சவேற்றிவ் கட்சி தலைவர் அன்ட்ரூ ஷீர் குற்றம் சாட்டியுள்ளார்.


மத்திய அரசாங்கத்தின் புதிய கார்பன் வரி புத்தாண்டின் முதல் நாளான நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமுலுக்கு வந்தது.

இந்நிலையில், இது தொடர்பில் நேற்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், இந்த புதிய வரியானது ஏற்கனவே போராடிவரும் கனேடியர்களை மேலும் இன்னல்களுக்கு உட்படுத்தும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

கார்பன் வரி விதிப்பினால் மக்களின் நாளாந்த அத்தியவசியப் பொருட்களுக்கான விலைகள் உயர்வடையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

லிபரல் கட்சியின் இந்த கார்பன் வரியானது சுற்றுச்சூழல் கொள்கைக்கு சாதகமானது இல்லை என்றும் வளி மாசை தடுப்பதற்கான திட்டம் அவர்களுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.