இலங்கை செல்லும் தமிழ் கனடியர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!

இலங்கைக்கு செல்லும் தமிழ் கனேடியர்கள் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்படக் கூடிய ஆபத்து உள்ளது என்று, தமது பிரஜைகளுக்கு கனேடிய அரசாங்கம் பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.  

கனேடியர்கள் எந்தநேரத்திலும் எச்சரிக்கையாக நடந்துக்கொள்ள வேண்டும். யாழ்ப்பாணம் உட்பட்ட வடக்கு, கிழக்கில் தொடர்ந்தும் படையினரின் பிரசன்னம் உள்ளது. இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி அங்கு செல்லும் தமிழ் வம்சாவளியினர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்படலாம்.

அத்துடன் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினை இன்னும் தொடர்கிறது. குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. காணி விடுவிப்பு தொடர்பான பிரச்சினையும் தொடர்கிறது. மதங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் இனங்களுக்கு இடையில் முறுகல்களை ஏற்படுத்தலாம்.

இந்தநிலையில் மேற்கத்தைய சுற்றுலாப்பயணிகளை தொந்தரவுக்கு உள்ளாக்கும் செயற்பாடுகள் அண்மையில் இடம்பெற்றுள்ளதாகவும் கனேடிய அரசாங்கம் தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

https://travel.gc.ca/destinations/sri-lanka#security