மார்க்கம் பகுதியில் உள்ள நகைக்கடையில் ஆயுத முனையில் கொள்ளை!

மார்க்கம் பகுதியில் உள்ள Markville Mall இல் நேற்று (திங்கட்கிழமை) இரவு 6.30 அளவில் ஆயுத முனையில் கொள்ளை இடம்பெற்றுள்ளது.

குறித்த அந்த வர்த்தக வளாகத்தினுள் உள்ள நகைக்கடை ஒன்றினுள் ஆயுதங்களுடன் நுளைந்த கொள்ளையர்கள், அங்கே இருந்த கண்ணாடி அலுமாரிகளை உடைத்து நகைகளை அபகரித்துக் கொண்டு தப்பித்துச் செல்ல முயன்றுள்ளனர்.

அங்கே பல்வேறு துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டதையும், முகமூடி அணிந்த கொள்ளையர்கள் குறித்த நகைக் கடையில் பொருட்களை அபகரிப்பதையும் காட்டும் ஒளிப்பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

இதேவேளை பல்வேறு முறைப்பாடுகளை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த யோர்க் பிராந்திய பொலிஸார், அங்கிருந்து கால்நடையாக தப்பித்துச் செல்ல முயன்ற சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.