மாகாண கல்வி முறை பற்றிய ஆலோசனைகளை முடிக்கும் ஒன்டாரியோ அரசு!

மாகாண கல்வி முறை பற்றிய பொது ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதை ஒன்டாரியோ அரசாங்கம் முடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாணத்தின் பாலியல் கல்வி பாடத்திட்டத்தை பற்றி சர்ச்சையில் மத்தியில் கல்வி அமைச்சர் லிசா தொம்சன் இந்த ஆண்டு ஆரம்பத்தில் குறித்த ஆலோசனைகளை அறிவித்தார்.

முற்போக்கு கன்சர்வேடிவ் அரசாங்கம் 2015 ல் முன்னாள் தாராளவாத ஆட்சி நடைமுறைப்படுத்திய ஒரு பதிப்பை கொண்டுவந்தது. இது சைபர்புல்லிங் மற்றும் பாலின அடையாளம் போன்ற சிக்கல்களை எதிர்கொண்டதுடன், இதற்கு முன்னர் இருந்த 1998 பாடத்திட்டத்தின் அடிப்படையிலும் தற்காலிகமாக மாற்றப்பட்டது.

இந்நிலையில் புதிதாக கொண்டுவரப்பட்ட பாலியல் கல்வி பாடத்திட்டத்தை பற்றி பொது ஆலோசனைகளை ஒன்லைன் மற்றும் தொலைபேசி வழியாக நடத்தப்பட்டது. இது பாலியல் பாடத்திட்ட பதிப்புக்கு அப்பால் மற்றய கொள்கை பகுதிகள் வடிவமைக்க உதவியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் பொது ஆலோசனைகளின் முடிவுகளை அரசாங்கம் புதுப்பிப்போம் என்றும் கல்வி அமைச்சர் தொம்சன் தெரிவித்தார்.