பல்வேறு பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டு – ஆண் ஒருவர் கைது!

பல்வேறு பாலியல் தாக்குதல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட, ஆண் ஒருவரை பொலிஸார் கைது செய்து்ளளனர்.

ஒன்ராறியோவின் பர்லிங்டன் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரையே கைது செய்துள்ள பொலிஸார் அவரைத் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.

இந்த மாதத்தில் இடம்பெற்ற ஐந்து வெவ்வேறு பாலில் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் தாங்கள் விசாரணைகளை மேற்கொண்டதாகவும், இந்தச் சம்பவங்களில் 11 வயதிலிருந்து 38 வயதான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹமில்ட்டன் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இந்த அனைத்து தாக்குதல் சம்பவங்களும் பர்லிங்டன் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளதாகவும், குறிப்பாக Waterfront Trail மற்றும் Cumberland Avenue பகுதியில், Tecumseh Parkஇல் இந்தச் சம்பவங்கள் பதிவாகியுளளதாகவும் விசாரணை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்த பாலியல் தாக்குதல் சம்பவங்களில் இறுதிச் சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றதாகவும், அதனைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முறைகேடாக நடந்து கொண்டமை, 16 வயதுக்கும் குறைவான வயதுடைய சிறுமிகளை பாலியல் ரீதியில் பாதித்தமை உள்ளிடட குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.