புதுவருடத்தை முன்னிட்டு இலவச போக்குவரத்து சேவை.

சீரற்ற கால நிலை காரணமாக Stouffville உட்பட Toronto பெரும்பாகத்தில் இன்று இரவு நடைபெறவிருந்த
வான வேடிக்கைகள் தடைபடுமென விழா ஏற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர் ….

2019ம் ஆண்டு புதிய வருடம் இன்று நள்ளிரவு பிறக்கிறது. இன்று இரவு இடம்பெறும் புது வருட கொண்டாட்டங்களை முன்னிட்டு TTCயும் GO போக்குவரத்து நிறுவனமும் தமது சேவைகளை நீடித்திருக்கின்றன. தமது சேவைகள் நாளை அதிகாலை 4 மணி வரை நீடிக்கப் பட்டிருப்பதாக TTC அறிவித்திருக்கிறது. அதிகாலை 3 மணிக்கு கடைசி நிலக்கீழ் தொடரூந்துகள் புறப்படும் என அது மேலும் தெரிவித்திருக்கிறது. அத்துடன் இன்று திங்கட்கிழமை மாலை 7 மணியில் இருந்து நாளை செவ்வாய்க்கிழமை காலை 7மணி வரை பஸ் மற்றும் தொடரூந்து சேவைகளை கட்டணம் அறவிடாமல் இந்த நிறுவனங்கள் இலவசமாக நடத்தவிருக்கின்றன.

இந்த இலவச சேவைகளை நடத்துவதற்கு இந்த போக்குவரத்து நிறுவனங்களுக்கு ஏற்படும் செலவை Corby Spirit and Wine நிறுவனம் பொறுப்பேற்று இதற்கான ஆதரவினை வழங்கியிருக்கிறது.

புது வருட தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்காக வான வேடிக்கைகளும் ஒழுங்கு செய்யப் பட்டுள்ளன. Toronto City Hall முன்பாகவுள்ள Nathan Philip Squareஇல் இன்று திங்கட்கிழமை நள்ளிரவும், Stouffville Memorial பூங்காவில் இன்று திங்கட்கிழமை இரவு 8 மணிக்கும் வான வேடிக்கைகள் இடம்பெறுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.