சீனாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கனடா பிரஜை விடுதலை!

கனேடிய நாட்டவரான சாரா மெக்ல்வரை நெருக்கடியான அரசியல் சூழலுக்கு மத்தியிலும் சீனா விடுவித்துள்ளதாகவும், அவர் கனடாவுக்கு திரும்பியிருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

சீனாவில் சட்டரீதியற்ற வகையில் பணி புரிந்தமைக்காக இந்த மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட அல்பெர்ட்டாவைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரே இவ்வாறு விடுவிக்கப்

கனடாவின் சர்வதேச விவகாரங்களுக்கான அமைப்பு, தமது நாட்டு பிரஜை விடுவிக்கப்பட்டமையை உறுதி செய்துள்ளதுடன், அவரின் உண்மையான பெயர் விபரங்களை வௌியிடவில்லை.  மெக்ல்வர் மேலும் இரண்டு கனேடியர்களுடனே தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையி, அவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

சாரா மெக்ல்வரின் பிரச்சினை ஏனைய இருவரின் வழக்கு விசாரணையை விட வேறுபட்டது என்று சீனாவும் கனடாவும் தெரிவித்துள்ளன.