பொதுமக்களை வாகனத்தால் மோதிவிட்டு தப்பிச் சென்ற நபர் அடையாளம் காணப்பட்டார்!

மிசிசாகுவா பகுதியில் உள்ள மதுபான விற்பனை நிலையத்திற்கு வெளியே பொதுமக்களை வாகனத்தால் மோதிவிட்டு தப்பிச் சென்ற நபரை அடையாளம் கண்டுகொண்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை காலை என்ஃபீல்ட் பிளேஸ் பகுதியில் உள்ள கரெஸ்டோ பார் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் தனது வாகனத்தில் ஏறி நடைபாதையில் சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் மீது மோதியுள்ளார்.

இதில் 5 பேர் காயமடைந்தனர். இதில் 23 வயதுடைய பெண் ஆபத்தான நிலையிலும், மேலும் நான்கு பெயர் சாதாரண காயத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் 37 வயதுடைய ரொறன்ரோ பகுதியை சேர்ந்த நபர் மீது 3 மோசமான தாக்குதல் குற்றச்சாட்டு மற்றும் மேலும் ஆபத்தானதும் நிறுத்தத் தவறும் குற்றம் அடங்கலாக இருவேறு குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு தொடர்பினை ஏற்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.