ஆர்ப்பாட்டங்கள் எந்நேரத்திலும் வன்முறையாக மாறலாம்: இலங்கை குறித்து கனடா எச்சரிக்கை

அமைதியான ஆர்ப்பாட்டங்கள் எந்நேரத்திலும் வன்முறையாக மாறலாம். எனவே, இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வோர் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கனடாவின் புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அரசியல் நெருக்கடிகள் தீர்ந்துள்ள நிலையில், இலங்கை குறித்த தமது பிரஜைகளுக்கான புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையை கனடா வெளியிட்டுள்ளது.

அதன்படி, இலங்கையில் அரசியல் ஸ்திரமின்மை என்ற பதம் புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

எனினும், இலங்கையில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறலாம் என்றும், அதனால் பொதுப் போக்குவரத்துகள் பாதிக்கப்படலாம் என்றும் புதிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் பாரிய கூட்டங்கள் இடம்பெறும் இடங்களுக்கு பயணிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் தமது பிரஜைகளுக்கு கனடா எச்சரித்துள்ளது.