ரொரன்ரோ Entertainment District இல் கத்திக் குத்துச் சம்பவம்

இன்று காலையில் ரொரன்ரோ Entertainment Districtஇல் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் ஆண் ஒருவர் பாரதூரமான காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 2 மணியளவில் Richmond Street மற்றும் Spadina Avenue பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு குழுக்கள் இடையே மோதல் இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை அடுத்து தாம் சம்பவ இடத்தைச் சென்றடைந்த வேளையில், அங்கே இரண்டு ஆண்கள் காயமடைந்த நிலையில் காணப்பட்டதாகவும், அவர்களில் ஒருவர் கத்திக் குத்துக் காயங்களுடன் பாரதூரமான நிலையில் இருந்ததாகவும ரொர்னரோ காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பாரதூரமான நிலையில் காணப்பட்ட அந்த நபர் உடனடியாகவே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதனை ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சம்பவ இடத்திலிருந்து ஒரு தொகுதி ஆண்கள் வாகனம் ஒன்றில் தப்பிச் சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.