நெடுஞ்சாலை 427 இல் தவறான பாதையில் பயணித்த முதியவர் பொலிஸாரால் கைது!

நெடுஞ்சாலை 427 இல் தவறான பாதையில் பயணித்த குற்றச்சாட்டில் 72 வயதுடைய முதியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெடுஞ்சாலையின் தெற்கில் உள்ள வழித்தடங்களில் மெதுவாக குறித்த முதியவர் வாகனத்தை செலுத்தியதால் அங்கு பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

இதன் காரணமாக அங்கு சென்ற ஒன்ராறியோ பிராந்திய பொலிஸார் குறித்த முதியவர் கைது செய்ததுடன் அவரிடம் உள்ள போக்குவரத்து உரிமத்தையும் கைப்பற்றினர்.

குறித்த சம்பவத்துடன் கிறிஸ்மஸ் தினத்தில் தவறான பாதையில் சென்ற இரண்டாவது சந்தர்ப்பம் இதுவென பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்க்கு முன்னர் கோட்டை எரிக்கு அருகில் குயின் எலிசபெத் வே பகுதியில் இதே போன்று ஒரு சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.