யோர்க் பல்கலைக்கு அருகில் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் – கைது செய்யப்பட்டவர் மீது 13 குற்றச்சாட்டு!

யோர்க் பல்கலைக்கழகத்திற்கு அருகே கடந்த மாதம் இடம்பெற்ற பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் மீது 13 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த சம்பவங்கள் குறித்து கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட 20 வயதுடைய நபர் மீதே குறித்த குற்றச்சாட்டுக்களை பொலிஸார் முன்வைத்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி ஃபவுண்டைன்ஹெட் பார்க், ஃபின்ச் அவென்யூ மேற்கு மற்றும் செண்டினல் சாலை வழியாக இரவு 9:30 மணியளவில் நடந்து சென்றுள்ளார்.

இதன் போது குறித்த பெண்ணை இருவர் கத்தி முனையில் அச்சுறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து ஒக்டோபர் 24 ம் திகதி முர்ரே ரோஸ் பார்க்வே மற்றும் செண்டினல் வீதி பகுதிகளிலும், ஒக்டோபர் 31 ம் திகதி குக் வீதி மற்றும் செண்டினல் வீதி பகுதியிலும் இருவேறு பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த சம்பவங்கள் இரண்டிலும் 20 வயதுக்குட்பட்ட பெண்களே பாதிக்கப்பட்டதாகவும், இந்த சம்பவங்களில் ஒரே சந்தேகநபர்களே ஈடுபட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டனர்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (20) அன்றும் இருவேறு பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றதை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த நபரை கைது செய்தனர்.

மேலும் குறித்த நபரை எதிர்வரும் 28 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.