பிரஸ்டோ அட்டை பயனாளர்களுக்கு அடுத்த ஆண்டு தொலைபேசி செயலி பயன்பாடு!

பிரஸ்டோ அட்டை பயனாளர்களுக்கு தொலைபேசி செயலி பயன்பாட்டை அடுத்த ஆண்டு முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பயன்பாடானது 2018ஆம் ஆண்டு வெளிவரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்த வருடம் வெளியிட இருப்பதாக மெட்ரோலின் செய்தித் தொடர்பாளர் ஆன் மேரி எக்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடுவதற்கு முன்பாக கூடுதல் கருத்துக்களை சேகரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

அந்தவகையில் குறித்த செயலியை டிசம்பர் 13 ஆம் திகதி மக்கள் கருத்துக்காக வெளியிட்ட அந்நிறுவனம், அதன்பதிவிறக்கங்களை 10 ஆயிரத்திற்குள் மட்டுப்படுத்தியது.

இந்நிலையில் முழுமையான தொலைபேசி செயலி பயன்பாட்டை அடுத்த ஆண்டு முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மெட்ரோலின் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.