யோர்க் பல்கலைக்கு அருகில் அடுத்தடுத்து பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் – ஒருவர் கைது!

யோர்க் பல்கலைக்கழகத்திற்கு அருகே கடந்த மாதம் இடம்பெற்ற பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி ஃபவுண்டைன்ஹெட் பார்க், ஃபின்ச் அவென்யூ மேற்கு மற்றும் செண்டினல் சாலை வழியாக இரவு 9:30 மணியளவில் நடந்து சென்றுள்ளார்.

இதன் போது குறித்த பெண்ணை இருவர் கத்தி முனையில் அச்சுறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து ஒக்டோபர் 24 ம் திகதி முர்ரே ரோஸ் பார்க்வே மற்றும் செண்டினல் வீதி பகுதிகளிலும், ஒக்டோபர் 31 ம் திகதி குக் வீதி மற்றும் செண்டினல் வீதி பகுதியிலும் இருவேறு பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த சம்பவங்கள் இரண்டிலும் 20 வயதுக்குட்பட்ட பெண்களே பாதிக்கப்பட்டதாகவும், இந்த சம்பவங்களில் ஒரே சந்தேகநபர்களே ஈடுபட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டனர்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (20) அன்றும் இருவேறு பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றதை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இருப்பினும் குற்றச்சாட்டுகளைப் பற்றியோ கைது செய்யப்பட்டவர் பெயரையோ அல்லது தகவலையோ பொலிஸார் இன்னும் வெளியிடவில்லை.