ரயில் மூலமான கச்சா எண்ணெய் ஏற்றுமதி அதிகரிப்பு!

கனடாவில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் இருந்து ரயில் மூலமான கச்சா எண்ணெய் ஏற்றுமதி, 327,229 பீப்பாய்களாக உயர்ந்துள்ளதாக தேசிய எரிசக்தி சபை தெரிவித்துள்ளது.

இது கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 269,829 லிருந்து 21 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே ஏற்றுமதியில் 300,000 பீப்பாய்கள் ஏற்றுமதி செய்யப்படுவது இதுவே முதல் தடைவ என கூறப்படுகின்றது.

எதிர்வரும் காலங்களில் ஏற்றுமதிகள் கூடுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தேசிய எரிசக்தி சபை தெரிவித்துள்ளது.