கஞ்சா அமோக விற்பனை: இரண்டே வாரத்தில் 43 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

கனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டதன் பின்னர், 43 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கஞ்சா விற்பனை செய்யப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

கனடா புள்ளிவிபரங்கள் திணைக்களம், கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதியிலிருந்து, கடைகள் மற்றும் ஒன்லைன் நிலையங்களில் விற்பனை செய்யப்பட்ட கஞ்சாவின், தரவுகளை சேகரித்தது.

இதனடிப்படையிலேயே தற்போது இந்த தகவலை கனடா புள்ளிவிபரங்கள் திணைக்களம், வெளியிட்டுள்ளது.

வாடிய மொட்டு அல்லது வாடாத மொட்டு, எண்ணெய், தாவரங்கள் மற்றும் விதைகள் என்பன கனடாவில் தற்போது பயன்பாட்டிற்கு சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.